Gulmohar
வேறு பெயர்
காடழியக் கண்ட நாட்டோர்
மழையொழிந்து போகுமென்றெண்ணி,
வீட்டுக்கொரு மரம் நட வலியுறுத்த,
நாட்டு நலனோடு சுயநலனும் கருதி,
வீட்டின் முன் ஒரு மரம் நட எண்ணி,
நானறிந்த மரA;களை மனசுக்குள்
வரிசைப்படுத்த,
அணி வகுத்த மரA;களுக்குள்,
செம்மலர்கள் சு{டி
மயக்கிய ‘குல்மொஹர்’
வெற்றி பெற,
பைத்தியக்காரியென்று
நகைத்தது ஒரு கூட்டம்,
தென்னங்கன்று நட்டால்
தலையெடுத்த பின்
பிள்ளையாய் உதவும்.
கீற்றிலிருந்து மட்டை வரை
அத்தனையும் காசு!
வீழ்ந்த பின்னும்
வீட்டுக்கு உத்திரமாய்
உதவும் உத்திரவாதம்!
மாங்கன்று நட்டால்,
காயாய், கனியாய்,
சருகாய், விறகாய்,
காற்றாய், நிழலாய்,
பயன் தரும்,
என்று இன்னும் ஏதோதோ
மரங்களின் பெயர் சொல்லி
என் மனம் மாற்ற முயன்று
தோற்றது.
நட்டு வைத்து நீரு}ற்றி,
வேலி கட்டி, பிள்ளையாய்ப்
பாதுகாக்க,
நாளொரு இலையும்,
பொழுதொரு கிளையுமாய்
வேலி தாண்டி, என் உயரம் தாண்டி
வளர்ந்தது.
பூக்கும் நாள் பார்த்து
காத்து நின்ற எனக்கு
மொட்டை மாடி சென்று
மொட்டுகளைக் கண்ட நாள்
குறிப்பேட்டில்;
முக்கிய நாள்!!
மொட்டுக்கள் மலர்ந்த தினம்
அவ்வாண்டின் சிறந்த தினம்!!
இலைகளுக்கிடையே மலர்கள் இருந்தது போக,
மரமே மலராடை போர்த்திய நாட்கள்..
முக்காடிட்ட மொகலாய மணப்பெண்ணாய்ச் சில நேரம்,
மருதோன்றியால் சிவந்த கைகளாய்ச்
சில நேரம்,
புரட்சிக்கொடி பிடித்த தோழர் கூட்டமாய்ச் சில Bநரம்..
பார்ப்Bபார் மனதை மயக்கியது..
சிந்தையைத் தூண்டியது.
வைகறையில் பனி நீர் தெளித்த
தரையில் மரபு மீறிய செங்Bகாலம்
இட்டிருக்கும்.
உச்சிப்Bபாதில் நிழல் தேடி வருவோர்க்கெல்லாம் நிழற்குடை பிடித்திருக்கும்.
அந்திப் பொழுதில் புள்ளினங்களுக்குப் புகலிடமாய் மாறிப் Bபாகும்.
இன்றும் நான் Bபானால்,
நட்டு வைத்து, நீருற்றியவள் என்றுணர்ந்து, நலமா என்று தலையாட்டிக்
கேட்கிறது!!
கேட்கையிலே நாலைந்து மலர்களை என் மேல் உதிர்த்து ஆசீர்வதிக்கிறது!!
Comments
Post a Comment