தங்கம்: திருமணத்துக்கான தகுதிகளில் ஒன்றா ?
தங்கம்: திருமணத்துக்கான தகுதிகளில் ஒன்றா ? நாகரிகம் வளர்ந்து விட்டதாகச் சொல்லிக்கொள்ளும் இக்காலத்திலும் தங்கத்தைத் திருமணத்திற்கு ஒரு தகுதியாகக் கருதுவது வெட்கப்பட வேண்டிய விஷயம். பெண்களுக்குத் திருமணமாகும்போது சீதனமாகக் கொடுக்கும் சீர் வகையறாக்கள் போதாதென்று அவளுக்குப் பிடிக்கிறதோ இல்லயோ தங்க நகைகளும் கொடுத்தாக வேண்டுமென்பது தலைமுறை தலைமுறையாக எழுதாத சட்டமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இதற்காக பெண்ணைப் பெற்றோர் காலம் முழுதும் சிக்கனமாக இருந்து சேமிக்க வேண்டியிருக்கிறது. எத்தனையோ தியாகங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. இருக்கும் கொஞ்ச, நஞ்ச சொத்துக்களையும் விற்று அல்லது கடன் பட்டாவது திருமணத்துக்காக தங்கம் வாங்குகிறார்கள். இது நியாயமா என்று எப்போதாவது சிந்தித்துப் பார்த்தோமா? பெண்களை லட்சக்கணக்கில் செலவழித்துப் படிக்க வைத்து, அவர்களுக்கு கைநிறைய சம்பாதிக்கும் தகுதியையும் கொடுத்த பின்னும் இந்நிலை மாறவில்லை. நம் பெண்கள் என்ன மாடுகளை விடக் கேவலமானவர்களா? சந்தையில் மாடு விற்பவன் மாட்டைக் கொடுத்து விட்டு, பணத்தை வாங்கி வருவான். ஆனால், பெண்ணைப் பெற்றவனோ, பெண்ணையும் கொடுத்த...